Home / உள்நாட்டு செய்திகள் / பாண் விலை 2 ரூபாவால் குறைப்பு….!!

பாண் விலை 2 ரூபாவால் குறைப்பு….!!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 2 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பழைய விலையில் கோதுமை மாவை விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணங்கியுள்ளமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இதற்கமைய, பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் குறைப்பதற்கு நேற்று மாலை தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு கிலோ கோதுமை மா கடந்த 6 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்புகள் வௌிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ ...

%d bloggers like this: