Home / உள்நாட்டு செய்திகள் / பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வழமை போல இயங்கும்-ஆளுநர்

பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வழமை போல இயங்கும்-ஆளுநர்

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வழமை போல இயங்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாயை தினம் இயங்காது என தகவல் வெளியிடப்பட்டுள்ள தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

60 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புகள் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் ...

%d bloggers like this: