Home / உலகச் செய்திகள் / பாக்.,கில் குண்டு வெடிப்பு : 100 பேர் உடல் சிதறி பலி

பாக்.,கில் குண்டு வெடிப்பு : 100 பேர் உடல் சிதறி பலி

இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் நேற்று, இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில், 100 பேர், உடல் சிதறி பலியாகினர்;ஏராளமானோர் காயம்அடைந்தனர்.
அண்டை நாடான பாகிஸ்தானில், வரும், 25ல், பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை சீர்குலைக்க, தலிபான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்தது.

தேர்தல் பிரசாரம் : இந்நிலையில், கைபர் மாகாணத்தில் உள்ள பானு பகுதியில், முடாஹிடா மஜ்லிஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம், நடந்தது; அப்போது, குண்டு வெடித்ததில், ஐந்து பேர் இறந்தனர். இந்த குண்டு வெடிப்பு நடந்த, அடுத்த சில மணி நேரத்தில், பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் பகுதியில், சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

அச்சம் : பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட, 95 பேர் இறந்தனர்; 150க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

ஐ.நா நோக்கி பொங்கு தமிழ் (படங்கள் உள்ளே)

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி பொங்கு தமிழ் 2018   Related

%d bloggers like this: