Home / விளையாட்டுச் செய்திகள் / பாக்-இலங்கை உ.கோப்பை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது: இலங்கை 3வது இடம்

பாக்-இலங்கை உ.கோப்பை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது: இலங்கை 3வது இடம்

பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பை 2019-ன் 11வது ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாமல் கடும் மழையால் பாதிக்கப்பட பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டது, இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணி 3 ஆட்டங்களில் 1 வெற்றி மூலம் 3 புள்ளிகள் பெற்று நிகர ரன் விகிதம் -1.517 என்ற நிலையில் உள்ளது.  நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகள் பெற்று முறையே முதல் 2 இடங்களில் உள்ளது.

பாகிஸ்தான் 4ம் இடத்திலும் மே.இ.தீவுகள், இங்கிலாந்து 5 மற்றும் 6ம் இடத்திலும் உள்ளன. இந்திய அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடியிருப்பதால் 7வது இடத்தில் உள்ளது.

 

இந்த ஆட்டம் ரத்தானதால் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்த இலங்கை அடுத்த உலகக்கோப்பை வரை காத்திருக்க வேண்டியதுதான், இதுவரை பாகிஸ்தான் 7-0 என்று வெற்றியில் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான் அணி தற்போது 5 நாட்கள் இடைவெளியைக் கொண்டாடிய பிறகு ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. இலங்கை அணி ஜூன் 11ம் தேதி வங்கதேசத்தை பிரிஸ்டலில் சந்திக்கிறது.

About இனியவன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: