Home / உலகச் செய்திகள் / பாக்தாதி உயிரிழந்ததை முதற்தடவையாக உறுதி செய்த ஐ.எஸ்

பாக்தாதி உயிரிழந்ததை முதற்தடவையாக உறுதி செய்த ஐ.எஸ்

IS தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி உயிரிழந்துள்ளமையை IS அமைப்பு முதற்தடவையாக உறுதி செய்துள்ளது.

அத்துடன், தமது அமைப்பிற்கான புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹஷ்மியை நியமித்துள்ளதாக IS அறிவித்துள்ளது.

எனினும், புதிய தலைவர் தொடர்பிலான ஏனைய தகவல்களையோ, அவரின் நிழற்படத்தையோ IS அமைப்பு வௌியிடவில்லை என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தினர் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையில் IS அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தார்.

சிறப்பு படைகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அபுபக்கர் அல் பாக்தாதி தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: