Home / உலகச் செய்திகள் / பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 52 பேரை நாடு கடத்தியது அமெரிக்கா!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 52 பேரை நாடு கடத்தியது அமெரிக்கா!!

அமெரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில், சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் 61 பேர் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். இதனை, பாகிஸ்தான் செய்தி நிறுவனமான டான்(DAWN) உறுதிபடுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுபோன்று விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பல்வேறு காரணிகளால், சட்டவிரோதமாக தங்கியிருந்த, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 52 பேரை, அமெரிக்க குடியுரிமைத்துறை, பலத்த பாதுகாப்புடன், தனிவிமானத்தில் நாடு கடத்தியது. இதேபோல், கிரீஸ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் 9 பேர், நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு சற்று முன்பு டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ...

%d bloggers like this: