Home / உலகச் செய்திகள் / பாகிஸ்தானில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்

 

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் அவுராக்சாய்யில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பலர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
இன்று காலை இங்குள்ள கலயா பகுதியில் உள்ள ஷியா வழிபாட்டுத் தலத்தை ஒட்டியுள்ள மார்க்கெட்டில் சனக்கூட்டம் நிறைந்திருந்த நேரத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழந்துள்ளது.

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் நாலாபுறமும் மக்கள் சிதறி ஓடினர்.

இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு தரப்பினர் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர்.

தாக்குதல் நடந்த பகுதியை தற்போது பொலிசார் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களை அடுத்து கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

About Radio tamizha

x

Check Also

ஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு!!

ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற ...

%d bloggers like this: