Home / உள்நாட்டு செய்திகள் / பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பிரதேசத்தில் ஒரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.

15 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், கனிம வளங்கள் நிறைந்த பகுதி என்றாலும், வளர்ச்சியடையாத பகுதியாகவே உள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பலூசிஸ்தானின் வளங்களை பாகிஸ்தான் சுரண்டுவதாக குற்றம்சாட்டும் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள், சுயாட்சி உரிமை கோரி போராடி வருகின்றனர். பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர் தீவிரவாதத் தாக்குதல்களையும் அவ்வப்போது அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா அருகே, குச்லக் எனுமிடத்தில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த எண்ணிக்கை தபால்மூல வாக்களிப்பும் ...

%d bloggers like this: