Home / விளையாட்டுச் செய்திகள் / பவர் ஹிட்டிங்கில், சிக்ஸர்கள் அடிப்பதில் மே.இ.தீவுகள் அருகில் கூட மற்ற அணிகள் இல்லை: ரவிசாஸ்திரி புகழாரம்

பவர் ஹிட்டிங்கில், சிக்ஸர்கள் அடிப்பதில் மே.இ.தீவுகள் அருகில் கூட மற்ற அணிகள் இல்லை: ரவிசாஸ்திரி புகழாரம்

மே.இ.தீவுகள் அணி வரும் உலகக்கோப்பையில் மற்ற அணிகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல்தான், பெரிய ஹிட்டர்கள், நல்ல பவுலர்கள் ஆகியோர் இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் பிட்ச்கள் உதவினால் கோப்பையைக் கூட வெல்லலாம் என்று பலரும் கருத்துக் கூறிவரும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் ‘ஆம்’ என்கிறார்.

மே.இ.தீவுகளில் கிறிஸ் கெய்ல், ஷேய் ஹோப், ஆந்த்ரே ரஸல், எவின் லூயிஸ், பூரன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர் அதே வேளையில் பவுலிங்கில் கிமார் ரோச், ஷனன் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப், ஒஷேன் தாமஸ், ஹோல்டர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் திறமையை நிரூபிக்கத் தயாராக இருக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று ஒருநாள் தொடரை சமன் செய்தனர், இதில் கெய்ல் வெளுத்துக் கட்டியதைப் பார்க்கிறோம். ஷேய் ஹோப் இப்போது ஒரு கிளாசி அதிரடி வீரராக மாறியுள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரவிசாஸ்திரி மே.இ.தீவுகள் பற்றி கூறியதாவது:

இந்தியாவில் அவர்கள் கடைசியாக் ஆடிய போது நான் கூறினேன், நாம் அந்த அணியை வீழ்த்தியிருக்கலாம் ஆனால் நமக்கு கடினமான தொடர் அது அவர்கள் அருமையான கிரிக்கெட் ஆட்டத்தை அளித்தனர் என்றேன்.

மேலும் அப்போது கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸல் இல்லை. நான் சொன்னேன், இந்த அணியை கவனியுங்கள், மிகப்பெரிய திறமைசாலிகள் உள்ளனர். இதில் எனக்குச் சந்தோஷமே.

மே.இ.தீவுகள் பெரிய அணியாக வலம் வந்த நாட்களில் அவர்களுடன் ஆடியுள்ளேன். உலகின் சிறந்த பல வீரர்களுக்கு எதிராக அவர்களுக்கு எதிராக ஆடியுள்ளோம். ஆனால் அது துயரகரமாக சிலபல சரிவுகளைச் சந்தித்து தற்போது மீண்டும் மேலெழுந்து வருகிறது. 2 உலகக்கோப்பை டி20யை பார்த்து விட்டனர்.

ஒருநாள் போட்டிகளில் அச்சமூட்டும் சில திறமைகளை அவர்களிடம் பார்க்கிறோம். அவர்களிடம் உள்ள பவர் ஹிட்டிங்… எந்த அணியும் அருகில் கூட வர முடியாது. சிக்சர்கள் அடிக்கும் அந்த பளீர் திறமை ஆச்சரியகரமானது, இதில் அவர்கள் உயரமான இடத்தில் இருக்கின்றனர்.

இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி

About இனியவன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: