Home / உள்நாட்டு செய்திகள் / பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும்

பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும்

நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் சில இடங்களில் மின்விநியோகத்தைத் துண்டிக்க நேர்ந்ததாக சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொன்றும் 300 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று மின்பிறப்பாக்கிகள் நுரைச்சோலையில் இயங்குகின்றன. இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று பழுதடைந்தது. இதனைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: