Home / உள்நாட்டு செய்திகள் / பல பிரதேசங்களில் இன்றைய தினம் சூரியன் உச்சம் கொடுக்கும் .

பல பிரதேசங்களில் இன்றைய தினம் சூரியன் உச்சம் கொடுக்கும் .

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களின்  பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய  வாய்ப்புக் காணப்படுகினறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் கட்டுநாயக்கா, பசியால, ஹம்பொல, விபில, கொக்நகர மற்றும் தம்பட்டை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியனி உச்சம் கொடுக்கின்றது.

கடல் பிராந்தியங்களில்

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

ஏனைய கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியத்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30_40 km வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் தென் மேற்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் தென் மேற்குத் திசையில் இருந்து தென் கிழக்குத் திசையை நோக்கியும் காற்று வீசும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50_55 kmஇலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்துவீசுவதுடன் அவ்வேளைகளில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்

இதேவேளை நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான  நிலையில் காணப்படும்.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்கள் களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கை களில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சிரேஸ்ட வானிலை அதிகாரி

தேசமானிய

மொஹமட் சாலிஹீன்இன்று முதல் 10 நாட்களுக்கு சூரியன் நேரடி உச்சம் : உச்சம் அதிகமாக உள்ள  இடங்களும் வெளியாகின | Virakesari.lk

About VITHUSHA

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...