Home / உள்நாட்டு செய்திகள் / பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்-ரணில்

பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்-ரணில்

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, நேற்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற  பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்லாமையால் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் ...