Home / உலகச் செய்திகள் / பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை-டிரம்ப்

பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை-டிரம்ப்

பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் கடற்படை மாலுமிகள் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளைப் பார்ப்பதாக கூறப்படுவது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார். கடற்படை மாலுமிகள் வானில் பார்த்தது என்ன என்பது குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தமக்கு ஒரே ஒரு முறை மட்டும் விளக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: