Home / உள்நாட்டு செய்திகள் / பயிற்றைச் செடிகளில் திடீரென இனந்தெரியாத நோய்த்தாக்கம்!

பயிற்றைச் செடிகளில் திடீரென இனந்தெரியாத நோய்த்தாக்கம்!

நானாட்டான் இராசமடு, அருவியாறு, மடுக்கரை பகுதிகளில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாக பயிற்றை, கத்திரி, மிளகாய் என பலவிதமான மரக்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

அங்கு பயிற்றஞ்செடிகளில் திடீரென இனந்தெரியாத நோய்த்தாக்கம் ஏற்பட்டு இலைகள் முழுவதும் ஒருவகை பூச்சிகளால் அரிக்கப்பட்டு செடிகள் வாடி விழுகின்றன.

கிருமி நாசினிகளைத் தெளித்தும் நோய்த்தாக்கம் கட்டுப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பூச்சித்தாக்கம் தொடர்பாக பார்வையிட்ட நானாட்டான் பிரதேச போதனாசிரியர், இந்த பூச்சி தாக்கம் கடும் வெய்யிலினாலும் பயிர்களுக்கு போதியளவு இடைவெளி இல்லாமல் நெருக்கமாக காணப்படுவதாலும் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இயற்கை முறை பீடை விலக்கிகளான நஞ்சற்ற தாவர பீடை விலக்கியான வேப்பம் இலை கரைசலைப் பயன்படுத்த முடியும்.

அத்தோடு இரசாயன மருந்து எனில் விவசாய போதனாசிரியர்களின் சிபாரிசுக்கு அமைவாக கோரஜன் போன்றவை பாவிக்கமுடியும்.

பிரதேசத்தில் உள்ள விவசாய போதனாசிரியர்களை அணுகி அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: