Home / உலகச் செய்திகள் / பயணிகள் விமானம், ஹெலிகாப்டருடன் மோதி விபத்து-மூவர் பலி!!

பயணிகள் விமானம், ஹெலிகாப்டருடன் மோதி விபத்து-மூவர் பலி!!

நேபாளத்தில் பயணிகள் விமானம், ஹெலிகாப்டருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தின் அருகே அபாயகரமான ஓடுதளத்தைக் கொண்ட லுக்லா விமான நிலையம் உள்ளது.

இங்கு பராமரிப்பு மற்றும் வேலைகளுக்காக ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். நேற்று இந்த விமானநிலையத்திற்கு சிறிய வகை பயணிகள் விமானம் புறப்படத் தயாரானது. அப்போது ஓடுதளம் ஈரப்பதமாக இருந்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் ஹெலிகாப்டர் முற்றிலும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் கவலை

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ...

%d bloggers like this: