Home / உள்நாட்டு செய்திகள் / பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மொஹமட் ரிஸ்வான் கைது!!

பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மொஹமட் ரிஸ்வான் கைது!!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மொஹமட் ரிஸ்வான் வத்தளை – மாபொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொஹமட் ரிஸ்வான் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபரிடமிருந்து 05 கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மொஹமட் ரிஸ்வானை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

தென், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

%d bloggers like this: