Home / உள்நாட்டு செய்திகள் / பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடனான சந்திப்பின் பேதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மீண்டும் கண்டனம் வௌியிட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கை அரசுக்கு அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பிற்கு வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீண்டு எதிர்கால நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நாடு ஆயத்தமாகி வருவதாக வௌிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பு, நீதி மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை செயற்படும் விதம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இதன் போது பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

குண்டுத்தாக்குதலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பிற்கு அமைச்சர் திலக் மாரப்பன நன்றி தெரிவித்த அதேவேளை, எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களை தடுப்பதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட அமெரிக்கா இணக்கம் தெரிவித்ததாகவும் இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

Millennium Challenge Corporation நிறுவனத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அனுமதி வழங்கப்பட்டதை இரண்டு தரப்பினரும் இதன்போது வரவேற்றுள்ளனர்.

நீதி, ​பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் பாராட்டு தெரிவித்ததாகவும் இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் John R. Bolton-ஐ அமைச்சர் திலக் மாரப்பன சந்தித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்தல், பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருதல் ஆகிய செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சரிடம் கூறியதாக, இந்த சந்திப்பின் பின்னர் John R. Bolton தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர மற்றும் திறந்த பசுபிக் வலயத்திற்கான பொது நோக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை பூரணமாக வழங்குவதாக திலக் மாரப்பன தெரிவித்ததாக John R. Bolton தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அரசியல் விவகாரங்கள் தொடர்பான பிரதி செயலாளர் David Hale-ஐயும் சந்தித்துள்ளார்.

சுதந்திர, திறந்த மற்றும் ஆரோக்கியமான இந்து – பசுபிக் வலயத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் இரண்டு தரப்பினதும் தொடர்புகளை வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டதாக David Hale தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான பதில் உதவிச்செயலாளர் Thomas L. Vajda – வை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு, இந்து – பசுபிக் ஒத்துழைப்பு, நல்லாட்சி, மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தகவல் பதிவாகியுள்ளது

About இனியவன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: