Home / உலகச் செய்திகள் / பனிப்பொழிவு விபத்துகளில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு RADIOTAMIZHA

பனிப்பொழிவு விபத்துகளில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு RADIOTAMIZHA

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி 67 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதுடன், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் பனி படர்ந்ததால், பாரம் தாங்காமல் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளன. மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் மழை மற்றும் பனிப்பொழிவால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலூசிஸ்தானில் பனிப்பொழிவு மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, நேற்று 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சீனாவில் பரவி வரும் கெரோனா வைரஸ்:விமான நிலையத்தில் பயணிகள் விசேட பரிசோதனை

சீனாவில் வேகமாக பரவி வரும் கெரோனா வைரஸ், நாட்டில் பரவாதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு ...

%d bloggers like this: