Home / உள்நாட்டு செய்திகள் / பத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ

பத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து நேற்றிரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆடை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலைத்தில் பரவிய தீயினால், குறித்த வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டே மாநகர சபைக்கு சொந்தமான 7 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றிரவு பரவிய தீயை, தீயணைப்பு பிரிவினர் இன்று அதிகாலை 5 மணிக்கே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், பத்தரமுல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...

%d bloggers like this: