Home / உள்நாட்டு செய்திகள் / பட்டப்படிப்புக்களைத் தொடர்வதற்காக விண்ணப்பித்துள்ள 4500 பேர்!

பட்டப்படிப்புக்களைத் தொடர்வதற்காக விண்ணப்பித்துள்ள 4500 பேர்!

அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர்வதற்காக 4500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பட்டப் படிப்புக்களைத் தொடர்வதற்கான வட்டியில்லா கடன் பெறுவதற்கு 4500 பேருக்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த வட்டியில்லா கடன் பெறுவதற்கு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால்,

2017 ஆம் ஆண்டுக்குரிய ஜசிஈ உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்று, பொதுப் பரீட்சையில் 30 இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கடன் திட்டத்தில் குடும்ப வருமானமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அரசு சாராத பத்து உயர் கல்வி நிறுவனங்களில் அரச அங்கீகாரம் பெற்ற 50 கற்கை நெறிகளை தொடர்வதற்கு கடன் வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: