Home / உள்நாட்டு செய்திகள் / படகு கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி

படகு கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி

அம்பாறை ஒலுவில் கடலில்  மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதன் போது ஒலுவில் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய சம்சுதீன் பஸீல் என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மீனவரின் சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About கலைப்பிரியன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: