Home / விளையாட்டுச் செய்திகள் / பஞ்சாப் அணியை 166 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய டெல்லி அணி!!

பஞ்சாப் அணியை 166 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய டெல்லி அணி!!

கிறிஸ் மோரிஸின் சிறந்த பந்து வீச்சுக் காரணமாக பஞ்சாப் அணியை 166 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய டெல்லி அணி.

12 ஆவது ஐ.பி.எல்.‍ தொடரின் 13 ஆவ லீக் போட்டி அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குமிடையே இன்றிரவு 8.00 மணிக்கு மொகாலியில் ஆரம்பானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ளதுடன், பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழைந்தது.

பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் சாம் கரன் ஆகியோர் துடுப்பெடுத்தாடிவர பஞ்சாப் அணி முதல் விக்கெட்டை 15 ஓட்டத்துக்கும் (ராகுல் 15), இரண்டாவது விக்கெட்டை 36 ஓட்டத்துக்கும் (சாம் கரன் 20), மூன்றாவது விக்கெட்டை 58 ஓட்டத்துக்கும் (அகர்வால் 6) பறிகொடுத்தது.

இதையடுத்து நான்காவது விக்கெட்டுக்காக டேவிட் மில்லர் மற்றும் சப்ராஸ் கான் ஜோடி சேர்ந்து ஆடிவர பஞ்சாப் அணி 12 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் சப்ராஸ் கான் 37 ஓட்டத்துடனும், டேவிட் மில்லர் 20 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் சப்ராஸ் கான் 13.5 ஆவது ஓவரில் லெமிசேனின் பந்து வீச்சில் 39 ஓட்டத்துடனும், 16.2 ஓவரில் மில்லர் 43 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 137 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் மண்டீப் சிங் 29 ஓட்டத்துடனும், ரஹ்மான் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுக்களையும், லெமிசேன், ரபடா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் ‍ டெல்லி அணியின் வெற்றிக்கு 167 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற விளையாட்டுச்  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை  அடிப்படையில்தான் விளையாட ...

%d bloggers like this: