Home / உலகச் செய்திகள் / பசியினால் வாடிய பிள்ளைகளுக்கு காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த தாய்

பசியினால் வாடிய பிள்ளைகளுக்கு காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த தாய்

பசி காரணமாக பக்கத்து வீட்டில் உணவு உண்ண சென்ற இரு பிள்ளைகளை அவர்களின் தாய் கோபத்தில் கொடூரமாக தாக்கிய சம்பவம் கேரளா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

கேரளா- மலப்புரம் பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுவர்களின் குடும்பம் கூலி தொழில் செய்பவர்கள். சில காலமாக போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த இரு நாட்கள் உணவு ஏதும் சமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்களது 6 மற்றும் 3 வயதான பிள்ளைகள் இருவரும் பசியால் துடித்துப் வாடிப்போயுள்ளார்.

அதனால் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் சிறுவர்கள் இருவரும் அயல் வீட்டில் உணவு உண்டுள்ளனர். இதை அறிந்த தாய் கோபத்தில் காச்சிய இரும்பு கம்பியால் இருவருக்கும் சூடு வைத்துள்ளார்.

இதனை அறிந்த அக்கபக்கத்தினர் பொலிஸில் புகார் செய்துள்ளனர். தொடர்ந்து சிறார் காப்பக அதிகாரிகளால் அந்த இரு குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

16 வயதுடைய சொந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறை

மலேசியாவில் 16 வயதுடைய தனது சொந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ...

%d bloggers like this: