Home / உள்நாட்டு செய்திகள் / நுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் காயம்!!

நுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து- நால்வர் காயம்!!

நுவரெலியாவிலிருந்து காலி பகுதி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் மண்மேட்டில் மோதிய முச்சக்கரவண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்திற்கு உள்ளான முச்சக்கரவண்டியில் சாரதியும், அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோர் பயணித்தனர்.

அவர்கள் நால்வரும் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: