Home / உள்நாட்டு செய்திகள் / நீதி­மன்­றுக்கு வரு­வோருக்கு யாழ்ப்­பாண நீதிவான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!!

நீதி­மன்­றுக்கு வரு­வோருக்கு யாழ்ப்­பாண நீதிவான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!!

நீதி­மன்­றுக்கு வரு­வோர் நேர்த்­தி­யாக ஆடை அணி­யா­மல், தலை முடி   வெட்­டா­மல்  ஒழுக்­கம் பேணாது                வரு­வார்­க­ள் ஆனால் அவர்கள்,   விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­ப­டு­வர் என்று யாழ்ப்­பாண நீதி­மன்ற நீதி­வான் ஏ.எஸ்.பி.போல் கண்­டிப்­பான அறி­வு­றுத்­தல் விடுத்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் நல்­லூர், முட­மா­வ­டியில் வீடு­களை அடித்து உடைத்­தமை, வாள்­வெட்­டில் ஈடு­பட்­டமை ஆகிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மீதான வழக்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் நேற்றைய தினம்                  விசா­ர­ணைக்கு வந்­தது.

மன்­றில் முற்­பட்ட சந்­தேகநபர்­கள் நேர்த்­தி­யாக ஆடை­கள் அணி­யாது, தலை முடி வெட்­டாது காணப்­பட்­ட­னர். அவர்­களை அவ­தா­னித்த நீதி­வான்       நீதி­மன்­றுக்கு சமூ­கம் அளிக்­கும் போது ஒழுக்க விழு­மி­யங்­க­ளைக்              கடைப்­பி­டிக்க வேண்­டும்.

இனி­மேல் வழக்­குக்­காக நீதி­மன்­றுக்கு­ வரும் ­போது நேர்த்­தி­யாக ஆடை­கள் அணிந்து வர­வேண்­டும். நாக­ரி­க­மான முறை­யில் தலை முடி­ வெட்­டி­யி­ருக்­க வேண்­டும். ஒழுக்­க­மற்ற முறை­யில் வந்­தால் சந்­தேக நபர்­கள்                    விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­ப­டு­வீர்­கள் என்று எச்­ச­ரித்­தார்.

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: