Home / தொழில்நுட்ப செய்திகள் / நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப நாசா திட்டம்!!

நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப நாசா திட்டம்!!

அடுத்த இரு ஆண்டுகளில் நிலவுக்கு ஆராய்ச்சி உபகரணங்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாசா அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ஆய்வு உபகரணங்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கான லேண்டர்களை தயாரிக்க ஆஸ்ட்ரோபோட்டிக், இண்டூவ்டைவ் மெசின்ஸ் ஆர்பிட் பியாண்ட் ((Astrobotic, Intuitive Machines and Orbit Beyond)) ஆகிய நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதன்படி அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் நிலவுக்கு நாசாவின் 23 உபகரணங்களைக் கொண்டு செல்லும். அந்த உபகரணங்கள், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாசாவுக்குத் தகவல்களை வழங்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

 

About இனியவன்

x

Check Also

யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் முடக்கம்!!

அமெரிக்காவில் அதிக படியான பயன்பாடு காரணமாக யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட செயலிகள் சிறிது நேரம் முடங்கின. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் ...

%d bloggers like this: