Home / உலகச் செய்திகள் / நிலநடுக்கத்துடன் கூடிய கடல் கொந்தளிப்பு! சுனாமி எச்சரிக்கை!

நிலநடுக்கத்துடன் கூடிய கடல் கொந்தளிப்பு! சுனாமி எச்சரிக்கை!

அவுஸ்ரேலியாவின் அருகே உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவின் நியூபிரிட்டன் தீவில் ரபாயுல் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டரில் பதிவாகியுள்ளது. இது கடற்கரையில் பூமிக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதனால் அங்கு வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தால் 100 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர்

அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். இந்த ...

%d bloggers like this: