Home / தொழில்நுட்ப செய்திகள் / நிரந்தரமாக மூடப்பட்டது கூகுள் பிளஸ் வலைதளம்!!

நிரந்தரமாக மூடப்பட்டது கூகுள் பிளஸ் வலைதளம்!!

கூகுள் பிளஸ் கணக்குகள் நிரந்தரமாக நிறுத்தப்படுவதால், தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூகவலைதளங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தால் கூகுள் பிளஸ் வலைதளம் தொடங்கப்பட்டது.

ஆனால் ஃபேஸ்புக், டிவிட்டர் போல வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லாததாலும், மேலும் கூகுள் பிளஸ்சில் 5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாலும் கூகுள் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடுடன் இருந்ததால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்ஸை மூடுவதென அந்த நிறுவனம் அறிவித்தது. ஆனாலும் தொடர்ந்து பயன்பாட்டிலே இருந்து வந்தது.

இந்த நிலையில் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாகவும், பயனாளர்கள் தங்கள் தகவல்களை சேமித்து கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

உலகளவில் பிரபல்யம் வாய்ந்த மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆன வாட்ஸ் ஆப் ஆனது இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுள் ஐபோன்களில் மாத்திரமே ...

%d bloggers like this: