Home / விளையாட்டுச் செய்திகள் / நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி பலப்பரிட்சை!!

நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி பலப்பரிட்சை!!

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி பலப்பரிட்சை நடத்த உள்ளது.

மான்செஸ்டர் மைதானத்தில் நாளை பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் காலை 11 மணியளவில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்னர் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை வானம் மேக மூட்டமாக இருக்கும என்றும் இதனைத்தொடர்ந்து மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மீண்டும் லேசான மழை பெய்து ஆட்டம் தடைப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த லீக் போட்டி மழையினால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: