Home / விளையாட்டுச் செய்திகள் / நியுசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி

நியுசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி

2வது ஒருநாள் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற இந்திய அணி 324 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மவுண்ட் மவுன்கனி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைச்சதம் அடித்தனர்.

ரோகித் சர்மா 87 ரன்களுடனும், ஷிகார் தவான் 66 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர். இவர்களை தொடர்ந்து ஆடிய கேப்டன் விராட் கோலி 43 ரன்கள் எடுத்திருந்தபோது, ட்ரென்ட் போல்ட் பந்து வீச்சில் அவுட்டாகினார்.

47 ரன்களுடன் அம்பதி ராய்டு வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 33 பந்துகளில் 48 ரன்களுடனும், கேதார் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

50 ஓவர்களின் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 324 ரன்கள் குவித்தது.

 

About அகமுகிலன்

x

Check Also

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!!

மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கட் ...

%d bloggers like this: