Home / உள்நாட்டு செய்திகள் / நான் மட்டும் வந்தால் மைத்திரியும் மஹிந்த அணியும் சிறைக்கு செல்ல நேரிடும்! முன்னாள் இராணுவத் தளபதி

நான் மட்டும் வந்தால் மைத்திரியும் மஹிந்த அணியும் சிறைக்கு செல்ல நேரிடும்! முன்னாள் இராணுவத் தளபதி

சிறிலங்காவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் மற்றும் பல இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் ராஜபக்ஸ அணியினரே உள்தாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய தேசிய முன்னணி அரசைக் கவிழ்ப்பதில் ராஜபக்ச அணியினரும் ஜனாதிபதி மைத்திரியும் குறியாகவுள்ளனர்.

இவர்கள் அரசியல் சூழ்ச்சி மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றனர். ஆனால், நாட்டின் நீதித்துறையும் சர்வதேச சமூகமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், தாக்குதல்கள், வன்முறைகளைத் தூண்டிவிட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அரசு மீது வெறுப்பு வரச் செய்துவிட்டு ஆட்சியைப் பிடிக்க இவர்கள் முயல்கின்றனர்.

அதுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற வன்முறைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் மைத்திரி கைகட்டி வேடிக்கை பார்க்கின்றார்.

ஆனால் மைத்திரி ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வரைக்கும் இந்த உண்மை வெளியில் வராது. ஏனெனில் இந்த அரசைக் கவிழ்ப்பதிலும் ராஜபக்ச அணியைக் காப்பாற்றுவதிலும் அவர் உறுதியாக உள்ளார்.

அதற்காகத்தான் சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை எனக்கு வழங்க மைத்திரி பின்னடிக்கின்றார்.

அந்த அமைச்சு என் வசம் வந்தால் ராஜபக்ச அணியினரும், தானும் சிறைக்கு செல்ல நேரிடும் என்று அவர் அஞ்சுகின்றார். என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

About இனியவன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: