Home / உள்நாட்டு செய்திகள் / நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்!

நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கிராமத்தின் ஒரு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தபுரம் கிராமத்தில் ஒரு வீதி சீரமைப்பின் போது கனரக இயந்திரம் மூலம் வீதியின் இரு புறமும் வெட்டப்பட்டதன் காரணமாக மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இதனால் குறித்த பிரதேசத்தின் மின்சாரம் கடந்த சனிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: