Home / விளையாட்டுச் செய்திகள் / நான்காவது இடத்தில் லோகேஷ் ராகுல்: திலீப் வெங்சர்க்கார் விருப்பம்

நான்காவது இடத்தில் லோகேஷ் ராகுல்: திலீப் வெங்சர்க்கார் விருப்பம்

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ‘பேட்டிங்’ வரிசையில் லோகேஷ் ராகுல் 4வது இடத்தில் களமிறக்கப்பட வேண்டும்,’’ என, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில், ஐ.சி.சி., 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ல் துவங்குகிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடர் குறித்து முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கூறியது: இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா களமிறங்குவர். மூன்றாவது இடத்தில் கேப்டன் விராத் கோஹ்லி விளையாடுவார். எனவே, 4வது இடத்தில் லோகேஷ் ராகுல் களமிறக்கப்பட வேண்டும். ஏனெனில் இவரது ‘பேட்டிங்’ ஸ்டைல் இந்த இடத்திற்கு சாதகமாக இருக்கும். தவிர, 4வது இடத்தில் ‘ஸ்பெஷலிஸ்ட்’ பேட்ஸ்மேன் தான் களமிறங்க வேண்டும்.

லோகேஷ் ராகுல், துவக்க வீரராகவும் விளையாடி உள்ளார். ஒருவேளை ‘டாப்–3’ பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகும் பட்சத்தில், 4வது இடத்தில் களமிறங்கும் ராகுல், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்கலாம். தவிர இது, மிக நீண்ட தொடர். எனவே இவரை போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப துவக்க வீரராகவும் களமிறக்கிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தத்தில் இவர், ‘லெவன்’ அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உலக கோப்பை தொடரில் இந்திய வீரர்களுக்கு கைகொடுக்கும். ஏனெனில் அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் தங்களை விரைவில் தயார் படுத்திக் கொள்வர். இது, மற்ற அணி வீரர்களை ஒப்பிடுகையில் இந்திய வீரர்களுக்கு சாதகமான விஷயம்.

ஆஸ்திரேலிய தொடரில் பெரிய அளவில் சாதிக்காக யுவேந்திர சகால், குல்தீப் யாதவ் உலக கோப்பையில் எழுச்சி பெறுவர். இவர்கள் ஆஸ்திரேலிய தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதுள்ள நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். நான்காவது அணியை கணிப்பது கடினமாக உள்ளது.

இவ்வாறு வெங்சர்க்கார் கூறினார்.

About இனியவன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: