Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுமாயின் அந்த நாடு சுகாதாரத் துறையில் ஆகக்கூடிய வளர்ச்சியைக் கண்ட நாடாகும்

நாட்டில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுமாயின் அந்த நாடு சுகாதாரத் துறையில் ஆகக்கூடிய வளர்ச்சியைக் கண்ட நாடாகும்

நாடொன்றில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுமாயின் அந்த நாடு சுகாதாரத் துறையில் ஆகக்கூடிய வளர்ச்சியைக் கண்ட நாடாக பாராட்டப்படும் என்று விசேட சத்திர சிகிச்சை வைத்தியர் அனில் அபேசேகர தெரிவித்தார்.

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்வதில் சுமார் 7 இலட்சம் பேர் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இவ்வாறான சத்திர சிகிச்சையை 3 ஆயிரம் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சத்திர சிகிச்சைகளுக்கு வெளிநாடுகளில் ஆகக்குறைந்தது 20 கோடி ரூபா செலவிடப்பட வேண்டியுள்ளது.

50ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இதில் கலந்து கொண்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர் ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் வீடு செல்ல முடியும் என்று விசேட சத்திர சிகிச்சை வைத்தியர் அனில் அபேசேகர தெரிவித்தார்.

இந்த சத்திர சிகிச்சைக்குத் தேவையான வளங்கள், உபகரணங்கள், மருந்துகளுக்காக அரசாங்கம் குறைவின்றி நிதியை வழங்குகின்றது என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிடுகையில், விசேட சத்திர சிகிச்சை வைத்தியர் அனில் அபேசேகர இந்நாட்டில் வெற்றிகரமாக இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் எனத் தெரிவித்தார்.

பாரிய அளவில் அர்ப்பணிப்பை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்து இந்த சத்திர சிகிச்சைப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெற்றிகரமான இருதய சத்திர சிகிச்சையை மேற்கொண்ட அனுராதபுரத்தைச் சேர்ந்த டொகடர் திருமதி டபிள்யு.ஜி.என்.ஜி.புஷ்பகுமாரியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

மஹிந்த மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென விரும்புகின்றனர்

மகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் கNநை;திரமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புகின்றனர். அதற்காகவே இன்றையஅரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநடுநிலைவகிக்கவேண்டுமென்றும் ...

%d bloggers like this: