Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டின் சில பகுதிகளில் மழை!!

நாட்டின் சில பகுதிகளில் மழை!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று (16ஆம் திகதி) பிற்பகல் மழை பெய்யலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய , சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை அதிகாரி
தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சில கடற்பிராந்தியங்களில், காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், கடற்சார் ஊழியர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: