Home / விளையாட்டுச் செய்திகள் / நாடு திரும்புகிறார் இலங்கை நட்சத்திர வீரர் லசித் மலிங்கா

நாடு திரும்புகிறார் இலங்கை நட்சத்திர வீரர் லசித் மலிங்கா

இலங்கை அணியின் அனுபவம் மிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள மலிங்காவின் மாமியர் காந்தி பெரேதா இன்று காலை 8 மணியளவில் காலமானார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள லசித் மலிங்கா நாடு திரும்பவுள்ளார்.

இன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்கா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு பின் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன் பின் 13ம் திகதி நடைபெறும் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ள மலிங்கா, எதிர்வரும் யூன் 15ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி மன்னன் ரஸல் இல்லை.. ஆனால் நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!

எங்களின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை, நாங்கள் தகுதிபெறுவோம் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ...

%d bloggers like this: