Home / ஆன்மீகம் / நல்லூர் பெருந்திருவிழால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் : வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி!

நல்லூர் பெருந்திருவிழால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் : வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி!

இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளச் சின்னமாக திகழும் நல்லூர் கந்தன் ஆலயம்.

நல்லூர் பெருந்திருவிழாவின் 23ஆம் நாளாகிய  சப்பை இரத திருவிழாவின்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அடியவர் ஒருவரும் வேட்டி கட்டி வடம் பிடித்து இழுத்த காட்சி கோவிலில் கூடியிருந்த மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

குறித்த நபர் ஜப்பான் நாட்டிலிருந்து இரண்டாவது தடவையாக நல்லூர் திருவிழாவைக் காண வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சுவாரஸ்ய விடயம் என்னவெனில், குறித்த யப்பான் நாட்டவர் நல்லூர் கந்தனின் தீவிர பக்தர் என்பதுடன் தனது நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டாவது தடவையாகவும் இலங்கைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளச் சின்னமாக திகழும் நல்லூர் கந்தன் ஆலயம் மேற்படி ஜப்பான் நாட்டவரையும் தன்னுள் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA |சந்திவெளி மற்றும் திஹிலிவெட்டை ஆகிய பிரதேசங்களில்இருதரப்பினர் மோதல்

மட்டக்களப்பு- சந்திவெளி மற்றும் திஹிலிவெட்டை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்களில் நான்கு பேர் வாள் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் ...

%d bloggers like this: