Home / உள்நாட்டு செய்திகள் / நல்லூர் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக திருநெல்வேலி சந்தையில் போராட்டம்!

நல்லூர் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக திருநெல்வேலி சந்தையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருநெல்வேலி சந்தை பகுதியில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக வியாபாரி ஒருவர் நடந்து கொண்டமை தொடர்பில் வியாபார உரிமத்தை தற்காலிகமாக நல்லூர் பிரதேச்சபை தடுத்துள்ளமையை கண்டித்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்றும்  நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை தொடக்கம் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு-சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் ...

%d bloggers like this: