Home / உள்நாட்டு செய்திகள் / நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழா தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழா தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரை வீதி தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வீதித்தடையின் போது வாகன போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆலய உற்சவ காலத்தில் சாதாரண காவடிகள் பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும். அதே நேரம் இம் முறை ஆலயத்துக்கு வரும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்படும்.

அத்துடன் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற செய்யுமாறு அடியார்கள் அனைவருக்கும் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: