Home / உள்நாட்டு செய்திகள் / நலலூரில் ரேடியோத் தமிழா கலையகம் : இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது !

நலலூரில் ரேடியோத் தமிழா கலையகம் : இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது !

யாழ். நல்லூரில் , ஆலயத்தின் உற்சவகாலத்தில் ,எமது வானொலி இரண்டாவது முறையாகவும் சிறப்புக்கலையகம் அமைத்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு ரேடியோத் தமிழாவின் உத்தியோக பூர்வ கலையகம் , மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இனிய நிகழ்வில் சின்மயா மிசன் சுவாமிகள் சதாகாசானந்தா அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சரவணா பிறின்டேஸ் உரிமையாளர் சாரூபன் மங்கள விளக்கை ஏற்றிவைத்தார்.

மேலும் ரேடியோத் தமிழா முகாமையாளர் சுரேன் மற்றும் ரேடியோத் தமிழா அறிவிப்பாளர் சங்கர் மங்களவிளக்கேற்றி வைத்தனர். ரேடியோத் தமிழா இணைய வானொலி கடந்த ஆண்டும் தனது கலையகத்தை நல்லூரில் சிறப்பாக அமைத்திருந்தது.

மேலும் இம்முறை இரண்டாவது முறையாகவும் தனது கலையகத்தைச் சிறப்பாக அமைத்துள்ளது.

ரேடியோத் தமிழாவின் அறிவிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ராஜ் மற்றும் பலரும் இன்றய ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இன்றில் இருந்து நல்லூர் உற்சவகாலம் நிறைவுபெறும் வரை ரேடியோத் தமிழாவின் கலையகத்தை நேய சொந்தங்கள் நல்லூர் வந்து நேரடியாகப் பார்வை இடலாம் என்பதை ரேடியோத் தமிழா இணைய வானொலிப் பணிப்பாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.மேலும் காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது .

மேலும் ரேடியோத் தமிழா கலையகத்தை பலரும் வந்து பார்வை இட்டுச் செல்வதாக அங்கிருக்கும் எங்கள் அறிப்பாளர் சங்கர் எமது இணைய செய்திக்கு தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும்

நாட்டின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் சீராக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் ...

%d bloggers like this: