Home / உள்நாட்டு செய்திகள் / நம் நாட்டு இளைஞர்களின் முயற்சியில் “Joymakers” சமூக அமைப்பு RADIOTAMIZHA

நம் நாட்டு இளைஞர்களின் முயற்சியில் “Joymakers” சமூக அமைப்பு RADIOTAMIZHA

ரேடியோ தமிழாFm இன் ஊடக அனுசரணையில் நம் நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் உள்ள இளைஞர்களின் முயற்சியில் “Joymakers” சமூக அமைப்பு திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் மற்றும் நீனாக்கேனி, மக்களை 11.01.2020 அன்று நேரடியாக சந்தித்தனர்.

சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை இலவசமாக உடைகளை அவர்கள் விரும்பியபடி தெரிவு செய்தனர்.கடை ஒன்றில் நாம் பணம் கொடுத்து வாங்குவது போல் அந்த பிரதேச தேவையுடைய மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இங்கே இலவசமாக எடுத்து சென்றனர்.

Joymakers_Everyone deserves to be happy என்ற தொனிப்பொருளில் Clothing Bank என்ற இந்த இளைஞர்களின் செயற்பாடு கடந்த காலங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின்
உரும்பிராய் , முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான்,சின்னசாலமன் போன்ற பிரதேசங்களிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது…நம் நாட்டு இளைஞர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ச்சியாக கைகோர்ப்போம்.

ஆடை வங்கித்திட்டத்திற்கு இதுவரை தங்களது உதவிகளை நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, எதிர்வரும் நாட்களில் நாடு முழுதும் நடைபெறவுள்ள ஆடை வங்கித்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு JoyMakers குழுவினர் அழைக்கின்றனர். JoyMakers பற்றிய மேலதிக தகவல்களை அவர்களது உத்தியோகபூர்வ முகப்புத்தகப்பக்கத்தில் (https://www.facebook.com/jmjoymakers/) பெற்றுக்கொள்ளலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்-பந்துல

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடி வதை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், ...

%d bloggers like this: