Home / சினிமா செய்திகள் / நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரப்பிலிருந்தும், தமிழக பா.ஜ., தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எதிர்கட்சிகள், சமூக சேவை அமைப்புகள் போன்றவை சூர்யாவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சூர்யாவை கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டி, ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான தகுதி சூர்யாவுக்கு உண்டு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. மக்கள் கருத்தை அறிவதற்காக என சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். சூர்யாவுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மீண்டும் திரைப்படங்களில் குஷ்பூ!!

நடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என ...

%d bloggers like this: