Home / உள்நாட்டு செய்திகள் / தொட­ருந்­துச் சேவை­க­ளின் நேரங்­க­ளில் மாற்­றம்!!

தொட­ருந்­துச் சேவை­க­ளின் நேரங்­க­ளில் மாற்­றம்!!

இலங்கை தொட­ருந்­துத் திணைக்­க­ளத்­தின் யாழ்ப்­பா­ணத்­துக்­கான புதிய தொட­ருந்­துச் சேவை­க­ளு­டன், தொட­ருந்­துச் சேவை­க­ளின் நேரங்­க­ளி­லும் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

புதிய சேவை­கள் நாளை­யும், நேர மாற்­றம் நாளை மறு­தி­ன­மும் நடை­மு­றைக்கு வர­வுள்­ளது.

புதிய தொட­ருந்­துச் சேவை­கள் (தின­மும்) –தொட­ருந்து இலக்­கம் 4081 – (கொழுப்பு கோட்­டை­யில் இருந்து யாழ்ப்­பா­ணம் வரை). கொழும்பு கோட்­டை­யி­ருந்து – காலை 08.50 மணிக்கு புறப்­பட்டு மாலை 6.34 மணிக்கு யாழ்ப்­பா­ணம் வந்­த­டை­யும்.

தொட­ருந்து இலக்­கம் 4082 – (யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு கோட்டை வரை). யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்­பட்டு மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்­டையை சென்­ற­டை­யும்.

தொட­ருந்து இலக்­கம் 4087 – (கொழும்பு கோட்­டை­யில் இருந்து காங்­கே­சந்­துறை வரை). கொழும்பு கோட்­டை­யில் இருந்து மாலை 7.15 மணிக்கு புறப்­ப­டும் காலை 4.20 மணிக்கு யாழ்ப்­பா­ணத்­தை­யும், 5.5 மணிக்கு காங்­கே­சந்­து­றை­யை­யும் வந்­த­டை­யும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தொட­ருந்து இலக்­கம் 4088 – (காங்­கே­சந்­து­றை­யில் இருந்து கொழும்பு கோட்டை வரை). காங்­கே­சந்­து­றை­யில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்­படு மாலை 6.16 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்து, மாலை 6.40 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்­பட்டு மறு­நாள் காலை 4.00 மணிக்கு சென்­ற­டை­யும்.

இர­வுத் தபால் தொட­ருந்து (4090) – காங்­கே­சந்­து­றை­யில் இருந்து மாலை 6.00 மணிக்கு புறப்­பட்டு மாலை இரவு 7.15 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்து அங்­கி­ருந்து 8.25 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்­ப­டும்.

இர­வுத் தபால் தொட­ருந்து (4089) – கொழும்பு கோட்­டை­யில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்­பட்டு மறு­நாள் காலை 5.4 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்து, காலை 5.55 மணிக்கு காங்­கே­சந்­து­றையை சென்­ற­டை­யும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: