Home / உள்நாட்டு செய்திகள் / தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கான காரணம் அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சம் கொண்டுள்ளமையே!

தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கான காரணம் அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சம் கொண்டுள்ளமையே!

மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமைக்கான காரணம் என்னவென்று ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி, அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டு வருகிறார் ஆனால் ஆளும் கட்சிக்காரர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாது, தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலை கண்டு அச்சம் கொண்டுள்ளமையே அதற்கான காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: