Home / இந்திய செய்திகள் / தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை!!

தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை!!

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியவாறு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.

இந்தத் தகவலை இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சுமத்தியும், அதன் ஊழல்கள் தொடர்பிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் மூன்று விளம்பரங்கள் ஊடாக தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை பிரிவினரால் இந்தியத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரங்களின் ஊடாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால், திராவிட முன்னேற்றக் கழகம் மீது அடிப்படையற்ற விவாதத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த மூன்று தேர்தல் பிரசார விளம்பரங்களையும் இந்தியத் தேர்தல்கள் ஆணையம் நேற்றைய தினம் தடை செய்துள்ளதாக அந்நாட்டு  ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

டிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் ...

%d bloggers like this: