Home / உள்நாட்டு செய்திகள் / தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அதிரடி செய்தி..!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அதிரடி செய்தி..!!

அவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கச் செல்லத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவது குறித்து தம்முடன் எந்த தரப்பினரும் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் அதிகாரிகளின் வேதனம், கொடுப்பனவுகள், எரிபொருள் மற்றும் உணவு முதலான செலவுகள் அடங்களாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 400 அல்லது 500 கோடி ரூபா செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

பத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...

%d bloggers like this: