Home / உள்நாட்டு செய்திகள் / தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பது தவறானது என தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பது தவறானது என தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பது  தவறானது என தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்.

நாளைய தின எதிர்ப்பு நடவடிக்கைகளை தாம்  முற்றாக எதிர்ப்பதாவும் எதிர்ப்பு கூட்டங்கள  பகிஷ்கரிப்பதாகவும், தேசிய உணர்வுகளை வைத்துக் கொண்டே இலக்குகளை வெற்றி கொள்ள வேண்டும் எனவும் கூட்டமைப்பு கூறுகின்றது.

தேசிய சுதந்திரதின நாளான இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் இன்றைய நாளில் யாழ்பானம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வடக்கு முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை இவ்வாறு தெரிவித்துள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: