Home / உள்நாட்டு செய்திகள் / தேசியக் கொடியை இறக்கி கறுப்புக் கொடி ஏற்றிய யாழ் பல்கலைக்கழகத்தினர்!

தேசியக் கொடியை இறக்கி கறுப்புக் கொடி ஏற்றிய யாழ் பல்கலைக்கழகத்தினர்!

சுதந்திரதினமான இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டுசுதந்திர தின நிகழ்வுகள்நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன. ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் கரிநாளாகப் பிரகடனம் படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்திய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கரிநாள் பதாகைகளையும் எமக்கு எப்போது சுதந்திர தினம் எனக் குறிப்பிட்டுள்ள கறுப்பு கொடிகளையும் பல்கலைக்கழகத்தைச் சூழ பறக்கவிடப்பட்டுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: