Home / விளையாட்டுச் செய்திகள் / தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தரவரிசையில் முன்னேறிய இலங்கை அணி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தரவரிசையில் முன்னேறிய இலங்கை அணி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என வைட்வொஷ் முறையில் இழந்த பாகிஸ்தான் அணி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன்  ஆறாவது இடத்துக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.

அத்தோடு பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நேற்று (திங்கட்கிழமை) நிறைவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 381 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய பாகிஸ்தான் அணி, 273 ஓட்டங்களுக்கு சுருண்டு, 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரை இழந்தது.

தற்போது, இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடர் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையையும் வெளியிட்டுள்ளது.

மேலும் தொடரை வைட்வொஷ் முறையில் வென்ற தென்னாபிரிக்க அணி, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை பின்தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், தென்னாபிரிக்க அணி 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்தும் டெஸ்ட் தரவரிசையின் மூன்றாவது இடத்தை 108 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து அணியை விட ஒரு புள்ளி வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

இலங்கை (91) அணியை விட 10 புள்ளிகள் முன்னிலையிலுள்ள அவுஸ்திரேலிய அணி 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்க தொடரில் நான்கு புள்ளிகளை இழந்து 88 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. ஏழாவது இடத்தை பிடித்துள்ள பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை விட மூன்று புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

டெஸ்ட் தரவரிசையின் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் இடங்களை முறையே மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகள் பிடித்துள்ளன.

 

About அகமுகிலன்

x

Check Also

நாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

%d bloggers like this: