Home / உலகச் செய்திகள் / துருக்கி இஸ்தான்புல்லில் திடீரென சரிந்து விழுந்தது 8 மாடி கட்டிடம் 3 பேர் பலி!

துருக்கி இஸ்தான்புல்லில் திடீரென சரிந்து விழுந்தது 8 மாடி கட்டிடம் 3 பேர் பலி!

துருக்கி இஸ்தான்புல்லில் Kartal மாவட்டத்தில் உள்ள 8 மாடி கட்டிடம் புதன்கிழமையன்று திடீரென சரிந்து விழுந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருந்த 14 வீடுகளில் 43 பேர் வசித்து வந்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் சிக்கி கொண்ட 9 வயது சிறுவன் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டான். அதேபோல 8 மாடி கட்டிடத்திற்கு அடியில், சிக்கிக்கொண்டிருந்த Havva Tekgoz என்கிற 5 வயது சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இஸ்தான்புல் ஆளுநர் அலி ஏர்லிகாயா கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த  விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள மூன்று தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டிருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள ...

%d bloggers like this: